சிகப்புநிற லெஹங்காவில் மின்னும் நடிகை ஷிவானி நாராயணன்..புகைப்படங்கள்..
ஷிவானி நாராயணன்
சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, பிக்பாஸ் பிரபலம் என கலக்கியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர்.
பின் சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு 98 நாட்கள் வரை வீட்டில் இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசன் நடித்த விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டில் விசேஷம், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
புகைப்படங்கள்
இதன்பின் ஆளே காணாமல் போன ஷிவானி பல மாதம் கழித்து இணையத்தில் ஆக்டிவாகினார். தற்போது டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.
இந்த வார எபிசோட்டிற்கு சிகப்புநிற லெஹங்கா ஆடையணிந்து வந்துள்ளார். அந்த ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஷிவானி.







