நிச்சயம் முடிந்த நிலையில், திருமணத்தை ஒத்தி வைத்த நடிகை ரித்விகா..காரணம் என்ன?

Riythvika Panneerselvam Bigg Boss Tamil Actress
By Edward Aug 22, 2025 12:30 PM GMT
Report

ரித்விகா நிச்சயம்

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2013ல் வெளியான பரதேசி படத்தில் முக்கிய ரோலில் நடித்து மெட்ராஸ் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் ரித்விகா. இதன்பின் பல படங்களில் நடித்த ரித்விகா, பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றினார்.

இதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த ரித்விகா, தான் வினோத் லட்சுமணன் என்பவரை நிச்சயம் செய்ததாக கூறி புகைப்படங்களுடன் ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார்.

நிச்சயம் முடிந்த நிலையில், திருமணத்தை ஒத்தி வைத்த நடிகை ரித்விகா..காரணம் என்ன? | Bigg Boss Riythvika Wedding Postponed Fans Shocked

ஆகஸ்ட் 27 ஆம் தேதி இருவரின் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ரித்விகா அறிவித்திருந்த நிலையில், குடும்ப காரணங்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக 27ம் தேதி நடக்கவிருந்த தனது திருமணம் ஒத்திவைத்துள்ளதாக ரித்விகா தற்போது தெரிவித்துள்ளார்.

விரைவில் ரித்விகா - வினோத் திருமணம் நடக்க பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.