60 நாள் தூங்கியே வீட்டில் இருந்ததுக்கு இத்தனை லட்சமா!! ஜோவிகாவின் பிக்பாஸ் சம்பளம்..

Jovika Vijaykumar
By Jai Dec 05, 2023 02:22 PM GMT
Report

அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய போட்டியாளர்கள் வெளியே வந்துவிட்டார்கள், சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.

போட்டியாளர்கள் கிடைக்கவில்லையா என தெரியவில்லை பிக்பாஸ் வெளியே அனுப்பிய பிரபலங்கள் சிலரை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார்.

இன்னும் என்னென்ன டுவிஸ்ட் கொடுப்பார் என தெரியவில்லை என்று நினைத்திருந்த போது யாரும் எதிர்ப்பாத வகையில் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டு வெளியே அனுப்பட்டார்.

மகள் வீட்டைவிட்டு வெளியேறியது கூட தெரியாமல் ஜோவிகாவின் அம்மா வனிதா விஜயகுமார் கோவாவிற்கு ஷூட்டிங் சென்றுவிட்டார். இதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்தும் வந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 60 நாட்களுக்கு மேல் இருந்த ஜோவிகாவிற்கு ஒரு வாரத்திற்கு 2 லட்சம் என்று சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.