சிறுவயதில் அப்பாவின் மரணம்!! ஏமாற்றம், அவமானம் என கஷ்டப்பட்ட பிக்பாஸ் 9 கம்ருதீன்..
பிக்பாஸ் 9 கம்ருதீன்
பிக்பாஸ் சீசன் 9 தற்போது 70 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது கம்ருதீன் - பார்வதி காதல் விவகாரம் தான் இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

தற்போது கம்ருதீன் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சினிமா பின்னணி இல்லாமல் சீரியல் நடிகராக பிரபலமான கம்ருதீன், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அவரின் முழுப்பெயர் கம்ருதீன் பாஷா.
அப்பாவின் மரணம்
பாடியில் உள்ள செண்ட் ஜோசப் பள்ளியில் படித்தவர் சவிதா இன் ஜினியரிங் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் பிளிப்கார்ட்டில் சீனியர் சாப்ட்வேர் இன் ஜினியராக பணியாற்றினார். சிறு வயதில் கம்ருதீனின் அப்பா இறந்துவிட அவரின் அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.
ஏழ்மையான குடும்பம் என்பதால் பெரிய உறவுகள் யாருமில்லாமல் அம்மா, அக்கா இவர்கள் தான் உலகம் என்று வாழ்ந்து வந்த கம்ருதீனிடம் நட்பாக வந்த இருவர், நீ ரொம்ப அழகா இருக்க, நிச்சயம் சினிமாவில் உனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

அப்படி தனக்கு தெரிந்த ஒருவரிடம் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பணத்தை வாங்கி கம்ருதீனை ஏமாற்றியுள்ளனர். ஏமாந்ததை உணர்ந்த கம்ருதீன், அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தபோது கம்ருதீனின் நண்பர்களின் பெரும் முயற்சியால் மாதவன் என்ற படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தனர்.
அப்படத்தை தொடர்ந்து பல வெப் தொடர்களில் நடித்த கம்ருதீன், மாடலாகவும் இருந்து சவுத் ஐகான் விருதையும் பெற்றார். இந்த விருதை வாங்கிய கம்ருதீன், பேருந்துக்கு கூட காசில்லாமல் நடந்து வந்தேன் என்று பேட்டியில் வருத்தமாக சொன்னார்.

பல கஷ்டங்களை அனுபவித்தும் படவாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அம்மாவும், அக்காவும் சினிமா வேண்டாம், அடுத்த வேலையை பாரு என முட்டுக்கட்டை போட்டுள்ளனர். நிச்சயம் சினிமாவில் நான் ஜெயிப்பேன் என்று நம்பி, யூடியூபில் குறும்படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.
பெரிய போராட்டத்திற்கு பின் தான், மகாநதி சீரியலில் குமரன் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சீரியலில் இருந்து விலகி தற்போது பிக்பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக கலந்து கொண்டு 70 நாட்களுக்கு மேல் இருந்து வருகிறார். ஆனால் பிக்பாஸில் அவர் ஏடாகூடமாக பேசி தற்போது விஜய் சேதுபதியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு வருகிறார்.