ரூ. 50 லட்சம் பரிசு இருக்கட்டும்!! பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா வாங்கிய சம்பளம் இவ்வளவா..

Vijay Sethupathi Bigg Boss Star Vijay Bigg boss 9 tamil Divya Ganesan
By Edward Jan 19, 2026 07:45 AM GMT
Report

பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர்

பிக் பாஸ் 9 பைனல் நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் சபரி, திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா என நான்கு போட்டியாளர்கள் பைனலில் களமிறங்கினர்.

இதில் அரோரா நான்காவது இடத்தை பிடித்தார். மேலும் விக்ரம் மூன்றாவது இடத்தையும், சபரி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

ரூ. 50 லட்சம் பரிசு இருக்கட்டும்!! பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா வாங்கிய சம்பளம் இவ்வளவா.. | Bigg Boss Season 9 Winner Divya Ganesh Salary

திவ்யா வாங்கிய சம்பளம்

மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற திவ்யா கணேஷ் பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். டைட்டில் வென்ற திவ்யா கணேஷுக்கு பரிசுத்தொகை 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசும் தரப்பட்டு இருக்கிறது.

ஷோவின் ஸ்பான்சர் ஆக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் லேட்டஸ்ட் victoris காரை திவ்யாவுக்கு சர்ப்ரைஸ் பரிசாக கொடுத்து இருக்கிறது. அந்த காரின் விலை ரூ. 25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த திவ்யா, மொத்தம் 77 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டிற்குள் இருந்துள்ளார். அப்படி ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டுள்ளது. ஆக சம்பளம் வெற்றித்தொகை என மொத்தம் ரூ.70 லட்சத்திற்கும் மேல் சம்பாதித்திருக்கிறாராம்.