பிக் பாஸ் ஷாரிக் - மரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்..
நட்சத்திர ஜோடிகளான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸின் மகனான நடிகர் ஷாரிக் பிக் பாஸ் மூலம் பிரபலமானார். இதற்கு முன் இவர் பென்சில் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்துகொண்ட பின்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
மேலும் சிவகார்த்திகேயனின் டான், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024ம் ஆண்டு தனது நீண்ட நாட்கள் காதலியான மரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில், கர்ப்பமாக இருந்து வந்த மரியாவிற்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளது. தான் தந்தையானதை மிகவும் மகிழ்ச்சியுடன் நடிகர் ஷாரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோ தொகுப்பமாக பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த அழகிய வீடியோ..