பிக்பாஸ் சீசன் 9ல் இந்த தேசிய விருது பிரபலத்தின் வாரிசா!! கன்ஃபாம் லிஸ்ட்..

Vijay Sethupathi Bigg Boss Gossip Today
By Edward Sep 17, 2025 06:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன், 7வது சீசனில் இருந்து விலகினார்.

8வது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார். சிறப்பாக நடத்திய விஜய் சேதுபதி இந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள 9வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 9ல் இந்த தேசிய விருது பிரபலத்தின் வாரிசா!! கன்ஃபாம் லிஸ்ட்.. | Bigg Boss Tamil Season 9 Contestant Confirm List

தேசிய விருது பிரபலம்

சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவும் இணையத்தில் வெளியானது. இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகி வந்தது.

தற்போது ஸ்ரீகாந்த் தேவா, மறைந்த மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி, சீரியல் நடிகர் புவியரசு, சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார், பாரதி கண்ணம்மா பரீனா அசாத், யூடியூபர் அஹமத் மீரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வதாக உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாட்டர்மெலன் திவாகர், இயக்குநர் பிரவீன் காந்தி உள்ளிட்டவர்களின் பெயரும் அடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.