பெரிய மைனாவுக்கு ஆசைப்பட்டு சின்ன மைனாவை தூக்கிய பிக்பாஸ்.. தானா வலையில சிக்குதே..

Amala Paul Bigg Boss Star Vijay Myna Nandhini
By Edward Sep 28, 2022 09:09 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2017ல் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிகழ்ச்சி, தற்போது ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்து வருகிறது.

இருந்தபோதுலும் டிஆர்பி-யில் இன்றுவரை சரிவை சந்திக்காமல் 5 சீசனை கடந்துவிட்டது. சமீபத்தில் பிக்பாஸ் 6ல் சாதாரண மக்கள் கூட கலந்து கொள்ளலாம் என்ற ஆடிஷனும் நடைபெற்றது. இதனைதொடர்ந்து நிகழ்ச்சிக்கு இந்த பிரபலங்கள் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

பெரிய மைனாவுக்கு ஆசைப்பட்டு சின்ன மைனாவை தூக்கிய பிக்பாஸ்.. தானா வலையில சிக்குதே.. | Bigg Boss Team Has Spread A Net For The Big Maina

தற்போது விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் மைனா என்ற பெயரில் பிரபலமான நந்தினியும் வீட்டிற்குள் செல்லவுள்ளாராம். ஏற்கனவே வெள்ளித்திரையில் மைனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அமலா பால் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியானது.

ஆனால் பல் கண்டீசன் போட்டால் தான் அந்த நிகழ்ச்சிக்கு செல்வேன் என்று கூறி போகவில்லை என்று மறைமுகமாக கூறிவிட்டார் அமலா பால்.

அவரை தொடர்ந்து மைனா நந்தினி உள்ளே போக கூப்பிட்டுள்ளார்கள். விக்ரம் படத்தில் சிறு ரோலில் நடித்து வாய்ப்புக்காக ஏங்கினாலும் அவர் யூடியூப் மூலம் காசு சம்பாதித்து தான் வருகிறார் நந்தினி.

Gallery