ஆமை மாதிரி வந்தாங்க ரெண்டு பேர்!! அவங்க செஞ்ச துரோகம்!! பிக்பாஸ் தாமரை எமோஷனல்..
பிக்பாஸ் தாமரை
பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தாமரை செல்வி. நாட்டுப்புற கலைஞராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் தாமரை செல்வி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சீரியல், ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டார். சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடித்து வந்த தாமரை, திடீரென சீரியலில் இருந்து விலகினார்.
சமீபத்தில் தாமரை இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ரெண்டு ஆமை புகுந்துச்சு
அதில், இந்த காலத்தில் யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாது என்று எதுவுமே தெரியவில்லை, பெரிய மன உளைச்சலில் நான் இருக்கிறேன். ஒருவருடன் பழகுவதற்கு முன் அவர்களை பற்றி நன்றாக தெரிந்துகொண்டு பழக வேண்டும் இல்லை என்றால், எனக்கு வந்தது போலத்தான் பிரச்சனை வரும். எங்கள் ஊரில் ஒரு விஷயத்தை சொல்லுவாங்க, ஆமை புகுந்த வீடு விளங்காதுன்னு.

அந்த மாதிரி என் வீட்டுக்குள் ரெண்டு ஆமை புகுந்துச்சு, அந்த ரெண்டு ஆமை வந்ததில் இருந்து என்னுடைய வாழ்க்கையே சின்னா பின்னமாகிப்போச்சு. ஆனால் ஆமை நல்லா தான் இருக்கு, என் வீடு தால் துரோகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கு.
அந்த ஆமை யார் என்ன என்பதை விரைவில் வீடியொவில் சொல்கிறேன். நீங்கள் என்னை திட்டினாலும், எனக்கு ஆதரவாக இருப்பது நீங்கள் மட்டும் தான். அதனால் அந்த ஆமையைப்பற்றி சீக்கிரம் அடுத்த வீடியோவில் சொல்கிறேன் என்று மன வேதனையுடன் ஒரு வீடியோவை தாமரை வெளியிட்டுள்ளார்.
யார் அந்த ஆமை? சீரியலில் இருந்து விலகியதற்கும் இதுதான் காரணமா என்ன என்பதை புரியாமல் ரசிகர்கள் கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்து வருகிறார்கள்.