இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் யார்? அட இவரா

Bigg Boss Bigg Boss Tamil 8
By Kathick Nov 01, 2024 03:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. 25 நாட்களை கடந்துள்ள நிலையில் மூன்று போட்டியாளர்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.

ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா ஆகியோர் வெளியிட்டுள்ள நிலையில், இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் 8 வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் யார்? அட இவரா | Bigg Boss This Week Eviction

ரஞ்சித், ஜாக்குலின், தீபக், அன்ஷிதா, சுனிதா, அருண், சத்யா, பவித்ரா ஜெப்ரி என 9 போட்டியாளர்கள் நாமினேட் ஆகியுள்ளார். இதில் நாமினேஷ் ஃப்ரீ பாஸ் டாஸ்கை பெண்கள் அணி வென்ற நிலையில், அதை வைத்து நாமினேட் செய்யப்பட்டுள்ள, பெண்கள் அணியை சேர்ந்த சுனிதாவை காப்பாற்றிவிட்டனர்.

இந்த நிலையில், மற்ற 8 போட்டியாளர்களில் அன்ஷிதா மற்றும் பவித்ரா ஆகிய இருவருக்கும் குறைவாக வாக்குகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதாகவும், இந்த இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என்று தகவல் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் வார இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்று.