ஜனநாயகன் - பராசக்தி கிளாஷ்!! சிவகார்த்திகேயன் பக்கம் சாய்ந்த ரஜினி, கமல்..
ஜனநாயகன் - பராசக்தி
தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம் தான் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படங்கள் பொங்களுக்கு மோத இருப்பதுதான்.

இந்த சூழலில் சிவகார்த்திகேயன் முன்னதாக விஜய் பற்றி பேசிய கருத்துக்கள் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி வருகிறது.
ரஜினி, கமல்
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 3 ஆம் தேதி நடக்கவிருப்பதாகவும் இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளார்களாம்.

அவர்களை சந்தித்து அழைக்கவும் செய்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் சிவகார்த்திகேயன் பக்கம் ரஜினி, கமல் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.