பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! பரிசு தொகையை வென்றது இவரா.. எதிர்பாராத நபர்
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ஷோ பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடி கொண்டிருந்தது.
24 போட்டியாளர்கள் பிக் பாஸ் 8ல் கலந்துகொண்ட நிலையில், தற்போது முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகிய 5 போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜாக்குலின் 8 லட்சத்துக்கான பணப்பெட்டியை எடுக்க முடியாமல் எலிமினேட் ஆனார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
தற்போது, இவர்கள் ஐந்து பேரில் யார் கோப்பையை வெல்ல போகிறார் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து உறுதியான தகவல் தெரியவந்துள்ளது.
டைட்டில் வின்னர்
அதன்படி, மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான முத்துக்குமரன் தான் பிக் பாஸ் 8 டைட்டில் வென்றுள்ளார். கோப்பையுடன் சேர்த்து பரிசு தொகையையும் முத்துக்குமரன் வென்றுள்ளார்.