பிக் பாஸ் 8 டிராபியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க
பிக் பாஸ் 8
கடந்த 7 சீசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசன் அவர் திடீரென வெளியேறி பின் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வந்தார்.
இந்த 8ம் சீசன் நேற்றோடு நிறைவு பெற்றது. பைனலில், ரயான், விஷால், முத்துக்குமரன், செளந்தர்யா, பவித்ரா ஆகிய 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் டைட்டிலை முத்துக்குமரன் ஜெயித்தார்.
அவருக்கு 40,50,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை சௌந்தர்யா பிடித்தார்.
ஒவ்வொரு சீசனிலும் அந்த சீசனின் நம்பர் அடங்கிய நம்பரை டிராபியில் வடிவமைப்பார்கள். அந்த வகையில் இது 8வது சீசன் என்பதால் இந்த சீசனில் 8-ம் நம்பர் பதித்த ஒரு டிராபியை வடிவமைத்துள்ளனர்.
கலாய்க்கும் நெட்டிசன்கள்
தற்போது, நெட்டிசன்கள் இதன் டிசைனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இது குறித்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த டிராபியை பார்க்கும் போது இராகு கேது சிலையை போல இருப்பதாக ஒப்பிட்டு மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.