பிக்பாஸ் 5ல் நடிகை யாஷிகா ஆனந்தின் ஆண் நண்பரா? வெளியானது புதிய லிஸ்ட்..
television
yashikaanand
biggbosstamil5
niroopnandakumar
By Jai
தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிறகு டி.ஆர்.பி பெரிய வெற்றியை கொடுத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது போல பிக்பாஸ் 5 சீசனையும் உலகநாயகன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
வருகிற அக்டோபர் 3ஆம் தேதி இரவு 6 மணிக்கு நிகழ்ச்சியின் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது. போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்வது என்ற கேள்வியும் சிலரின் பெயர்கள் கொண்ட லிஸ்ட்டும் வெளியாகி வந்தன.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5ஆம் சீசனில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஆண் நண்பர் நிரூப் நந்த குமார் என்பவர் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளார். யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக்கான விவகாரத்தில் சிக்கியவர் தான் நிரூப் நந்தகுமார்.