பிக்பாஸ் 5 சீசன் நடக்குமா? செட் அமைக்கும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்

biggboss coronavirus biggbosstamil5
By Edward May 18, 2021 07:44 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டிஆர்பிக்கு என்ற பிரபல டிவி சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று பிக்பாஸ். கடந்த 4 ஆண்டுகளாக தமிழில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு சீசன் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்றனர். அதற்கு காரணம் கொரோனா வைரஸின் தாக்கம்தானாம். நிகழ்ச்சி கூடிய சீக்கிரமே பிக்பாஸ் 5 சீசன் தமிழ் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் பரவியது. போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.

பிக்பாஸ் 5 சீசனுக்கான செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக பூந்தமல்லியில் இருக்கும் தனியார் ஃபிலிம் சிட்டியில் துவங்கி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் 6 பேருக்கு தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

இது பிக்பாஸ் ரசிகர்களுக்கும் பிக்பாஸ் குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போகுமா? என்ற கேள்விகள் எழும்பியும் வருகிறது.