சிவராத்திரியில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட அஜித் பட நடிகை!! சில்மிஷம் செய்த ரசிகர்..

Abhirami Bigg Boss
By Edward Feb 19, 2023 06:42 AM GMT
Report

மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்த அபிராமி, எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் அபிராமி.

அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்தார். அதன்பின், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் டாப் 5 இடத்தினை பிடித்திருந்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் அபிராமி, ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அபிராமி இன்று சிவராத்திரி சமயத்தில் காலஹஸ்தியில் பொது இடத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அப்போது ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க வருவது போல் அபிராமி மீது கையை போட்டு சில்மிஷம் செய்துள்ளார். அந்த வீடியோவை அபிராமி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.