பிக்பாஸ் நடிகை அபிராமியா இது!! அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..
அபிராமி வெங்கடாசலம்
மாடலிங் துறையில் இருந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். நோடா படத்தில் சிறு ரோலில் நடித்த அபிராமி, களவு, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 56 நாட்கள் மட்டுமே இருந்து பின் வெளியேறினார்.
அதன்பின், ராக்கெட்ரி, வான் மூன்று, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினையும் பெற்றார்.
ஒருசில விளம்பரங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வரும் அபிராமி சரியாக பட வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தேன் வந்தாய் என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகர் கணேஷ் வெங்கட், நடிகை கீர்த்தனா, அஞ்சலி ராவ், பிக்பாஸ் நடிகை அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த ஜனவரி மாதம் நிறைவு பெற்றது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, சமீபகாலமாக இணையம் பக்கம் வராமல் இருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.