பாவ்னிக்கு லவ் லட்டர் கொடுத்த அமீர்! எத்தனை நாளுக்கு தான் மறைப்பீங்க..

Viral Video Bigg Boss Pavani Reddy
By Edward Jun 03, 2022 03:16 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை காதல் ஜோடிகள் என்று கிசுகிசுக்கப்பட்டு வருபவர் பாவ்னி மற்றும் அமீர். பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட இருவரும் நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு தற்போதும் பெற்று வருகிறது.

அந்தவகையில் தன் காதலை அமீர் வெளிப்படுத்தியும் பாவ்னி அதையெல்லாம் பொருட்டாக மதிக்காலும் இதுநாள் வரை இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் அவர்கள் கலந்து கொண்டுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட்டில் அமீர் எனக்கு பிடிக்கும் பட் டைம் வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார்.

அதன்பின் இருவரும் ஜோடியாக நடனமாடியது ரம்யா கிருஷ்ணனையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் அமீர் பாவ்னிக்கு லவ் லட்டர் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் ஏன் பாவ்னி இதைப்போய் மறைக்கிறீங்க, சீக்கிரம் சொல்லுங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.