விஜய் டிவி ஷோ ஸ்கிர்ப்ட் தான்..எதுவும் உண்மை இல்ல. நம்பாதீங்க!! பிக்பாஸ் பிரபலம்..
மோகன் வைத்தியா
பிரேமி என்ற சீரியல் மூலம் 1997ல் சின்னத்திரையில் அறிமுகமான மோகன் வைத்தியா, செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர், தமிழ்த் திரைப்பட நடிகராக திகழ்ந்து வருகிறார். காதலர் தினம் படத்தில் ஒருசிறிய ரோலில் நடித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.
காது கேட்காத, வாய் பேச முடியாத மனைவியுடனும், ஒரு மகனுடம் வசித்து வந்த மோகன் வைத்தியா, பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு 28 நாட்களுக்கு பின் எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் ஸ்கிரிப்ட் என்று பலர் விமர்சித்து வரும் நிலையில், அது குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே எங்கள் சீசன் தான் பெஸ்ட்.
இதில் கோபம், அன்பு, காதல், அஃபக்ஷன் என அனைத்துமே இருந்தது. பிக்பாஸ் ஸ்கிரிப்ட் இல்லை, அதே சமயம் குக் வித் கோமாளி ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோ தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாங்கள் செய்தது அனைத்துமே ஸ்கிரிப்ட் தான்.
உங்களை பார்க்க வைப்பதற்காக இப்படி செய்கிறார்கள். அதையாரும் நம்பிவிட வேண்டாம், அனைத்துமே பொய். நன்றாக பார்த்து எஞ்சாய் பண்ணுங்க என்றும் கூறியிருக்கிறார்.
எனக்கு இந்த வீடு பங்களா மாதிரி தான், இருப்பது நான் மட்டும் தான், சொந்த வீடு திருமுல்லைவாயிலில் இருக்கு, அந்த வீடு வாடகைக்கு இருக்கிறது. இந்த வீட்டில் நான் வாடகைக்கு இருக்கிறேன், மாதம் ரூ. 12 ஆயிரம் வாடகை கொடுக்கிறேன் என்று மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார்.