பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க இத்தனை கோடியா? பாகுபலி பட்ஜெட்டை மிஞ்சும் சம்பள விவரம்..
இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு சம்பந்தப்பட்ட ஸ்கிரிப்ட்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்தியில் 14 சீசன்களும் தமிழ், தெலுங்கு,மலையாள, கன்னடம் போன்ற மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.
தெலுங்கில் பிக்பாஸ் 5 ஆரம்பித்துள்ளநிலையில் தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 சீசன் அக்டோபர் ஆரம்பத்தில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்காக கமல் ஹாசன் 150 கோடி சம்பளமாக வாங்க இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகியது.
இந்நிலையில் பிக்பாஸ் 15 இந்தியில் கூடிய சீக்கிரம் ஆரம்பமாகவுள்ளது. இந்த சீசனையும் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கவுள்ளாராம்.பிக்பாஸ் சீசன் 15 யை தொகுத்து வழ்ங்க ஒரு வாரத்திற்கு 25 கோடி ரூபாய் என மொத்தம் 14 வாரத்திற்கு 350 கோடி பேசப்பட்டுள்ளதாம்.
கடந்த இரு சீசன்களில் ஒரு வாரத்திற்கு 13 கோடி ரூபாய் வாங்கிய நிலையில் 25 கோடியாக உயர்த்தியுள்ளார் சல்மான் கான்.
இது பாகுபலி 2வின் முழு பட பட்ஜெட்டை விட அதிகம் என்று கூறப்படுகிறது.