இந்த அழகு போதாதுன்னு இப்படியொரு சர்ஜரியா? பிக்பாஸ் ஜூலி எடுத்த சிகிச்சை..
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் பெற்று பிரபலமானவர் மரிய ஜூலியானா. இதன் மூலம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு போட்டியிட்ட ஜூலி சில விசயங்களால் வெறுப்பை சம்பாதித்து மக்கள் ஆதரவை இழந்தார்.
ஓவியாவிடம் ஏற்பட்ட பிரச்சனை தற்போது வரை அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வருகிறார். நிகழ்ச்சிக்கு பிறகு பல பிரச்சனைகளையும் சவால்களை சந்தித்து மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி 5 இடத்தினை பிடிக்க போராடினார்.
அதன்பின் க்ளாமர் போட்டோஷூட் சிறப்பு நிகழ்ச்சி என கலந்து கொண்டு வந்தார் ஜூலி முக அழகிற்காக ஸ்கின் கிளினிக் என்று Vampire Facial எனப்படும் ரத்தம் மூலம் முகத்தை அழகுப்படுத்தும் சிகிச்சையை ஜூலியானா மேற்கொண்டதாக அவரது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த அழகு போதாதுன்னு இப்படியா செய்வது என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.