பிரபல நடிகரின் மகனுக்கு வலைவீசும் பிக்பாஸ் ஜூலி! வைரலாகும் புகைப்படம்..

biggboss julie shariq பிக்பாஸ் சீசன் 2
By Edward Jul 07, 2021 07:41 AM GMT
Edward

Edward

Report

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரின் பார்வையையும் இழுத்து பிரபலமானவர் ஜூலி. இதன்மூலம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதத்தால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்குபெற்றும் வருகிறார். அதேபோல், பிக்பாஸ் சீசன் 2 , நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஷாரிக். இவர் பிரபல நடிகர்களான உமா மற்றும் ரியாஸ்கான் நட்சத்திரங்களின் மகனாக அறிமுகமானவர்.

இந்நிலையில்தான் நடிகர் ரியாஸ்கான் – உமா ரியாஸ் ஆகியோரின் மகனான ஷாரிக்குடன் சேர்ந்து ஜூலி ஊர் சுற்றி வருவதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

மேலும் இதை நிரூபிக்கும் விதமாக இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

பிரபல நடிகரின் மகனுக்கு வலைவீசும் பிக்பாஸ் ஜூலி! வைரலாகும் புகைப்படம்.. | Biggboss Julie Shariq Selfie Photo Viral