ரச்சிதா, ADk-வை விட மிஞ்சிய சம்பளம்!! பணமூட்டையோடு இத்தனை லட்சத்தோடு கிளம்பிய கதிரவன்
பிக்பாஸ் சீசன் 6 தற்போது 100 நாட்களை தாண்டி சென்று இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கமல் ஹாசன் அவர்களால் கடந்த வாரம் ADk வீட்டினைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
அவர் சென்ற வாரத்தில் பழைய பிக்பாஸ் போட்டியாளர்களும் மற்றும் இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்களும் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் 3 லட்சம் மதிப்புள்ள பணமூட்டையை பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்துள்ளார்.
அதற்கு இறுதிபோட்டிக்கு தேர்வான அமுதவாணன் எடுத்துப்போவார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் திடீரென கதிரவன் 3 லட்சம் இருந்த பணமூட்டையை எடுத்துக்கொண்டு சென்றுள்ளாராம்.
இந்நிலையில், அவரது சம்பளம் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் என பேசப்பட்டு 100 நாட்களுக்கு 20 லட்சம் சம்பளமாகவும் 3 லட்சம் பணமூட்டையை சேர்ந்து 23 லட்சத்தோடு வீட்டுக்கு சென்றுள்ளார் கதிரவன்.
இதுவரை சென்ற விஜய் டிவி போட்டியாளர்களின் சம்பளத்தை விட கதிரவன் அதிகமாக எடுத்துக்கொண்டு சென்றுள்ளாராம். அதேபோல் 101வது நாளில் 3 லட்சம் பணப்பெட்டியை ஆரம்பத்தொகையாக பிக்பாஸ் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது