16 வயது வித்தியாசம்! கமல் தலைமையில் சீரியல் நடிகையுடன் திருமணம் செய்கிறார் பிக்பாஸ் சினேகன்!

marriage biggboss kamalhaasan snehan kannikaravi
By Edward Jul 26, 2021 05:12 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகி ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமானவர் சினேகன். சில காலம் வாய்ப்புகள் வராதநிலையில் பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். கட்டிபிடி வைதியர் என்ற பட்டப்பெயர் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பெற்று வைரலானார்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தன் உறவினர் பெண்ணை திருமணம் செய்யபோவதாக சில வருடங்களுக்கு முன் செய்திகள் பரவியது. இந்நிலையில் சீரியல் நடிகை கன்னிகா ரவி என்பவரை 8 வருடமாக காதலித்து வருவதாகவும் அவருடன் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் ஜூலை 29ல் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக சினேகன் கன்னிகா ரவி எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery