ராத்திரி நேரத்திலும் டார்ச்சர் செய்த நபர்? பிக்பாஸ் நடிகைக்கு ஏற்பட்ட தொல்லை..

Bigg Boss
By Edward Jun 14, 2022 10:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் வைஷ்ணவி பிரசாத். ஆர்ஜேவாக பணியாற்றிய வைஷ்ணவி நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு பெற்று சில நாட்களில் வெளியேறினார்.

நிகழ்ச்சிக்கு பின் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்தவர் காதலித்தவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் தன்னை தொடர்ந்து பின் தொடர்ந்து வருவதாகவும், நான் நாயுடன் வாக்கிங் செல்லும் போது பைக்கில் பாலோ செய்து வந்ததாகவும் இணையதள சேவை மூலம் போலிசில் புகாரளித்துள்ளார்.

நான் வீட்டிற்கு செல்லும் வரை காத்திருந்து கிட்டத்தட்ட 30 நிமிடம் பாலோ செய்து என்னை டார்ச்சர் செய்ததாகவும், என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து போய் வீட்டிற்கும் செல்லாமலும் இருந்துள்ளாராம்.

அந்த நபரை அவருக்கு தெரியாமல் புகைப்படமும் வீடியோவும் எடுத்து டிவிட்டர் பக்கத்தில் பதிவினை போட்டுள்ளார். இதனுடன் ஆடியோ வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதை என் அம்மாவிடம் கூறியதற்கு பழி வாங்க உன் மீது ஆசிட் ஊசினால் என்ன செய்வது புகார் அளிக்காமல் இரு என்று கூறியுள்ளார்.

இதுவே வேறொரு பெண்ணிற்கு நடந்தால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் புகார் அளித்தேன் என்று கூறியுள்ளார் வைஷ்ணவி. இவரின் துணிச்சலுக்கு பலர் பாராட்டி வருகிறார்கள்.