நடிகை விசித்ராவை ரூமிக்கு அழைத்த டாப் நடிகர்!! ஷூட்டிங்கில் கன்னத்தில் பளார் விட்ட ஸ்டெண்ட் மாஸ்டர்..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது பல விறுவிறுப்பான டாஸ்க்குகள் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் , போட்டியாளர்களின் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றி பகிரும் டாஸ்க் கொடுத்தனர். அதில் அனைவரும் பேசிய நிலையில் நடிகை விசித்ராவும் தனக்கு நடந்த பூகம்ப சம்பவத்தை பகிர்ந்தார்.
அதில், நான் 2001 திருமணத்திற்கு பின் காணாமல் போய்விட்டேன் என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு காரணம் என்ன என்பதும் தெரியாது. அந்த சமயத்தில் எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்து, ஆறாத இரணமாக இன்று வரை இருக்கிறது. ஒரு படத்தின் டாப் ஹீரோ என்னிடம் வந்து, வருங்கால கணவர் அப்படத்தில் மேனேஜராக இருந்த சமயத்தில், பார்ட்டிக்கு என்னை அழைத்தார்.
அப்போது டாப் ஹீரோ ’இந்த படத்தில் நீ நடிக்குற இல்ல, என் ரூமுக்கு வா?’ என்று கூறினார். என் பேர் என்ன என்று கூட கேட்கவில்லை. எனக்கு புரியவில்லை, என் ரூமிற்கு சென்று கதவை சாத்திவிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் முதல் பல பிரச்சனைகளை சந்தித்தேன். தமிழ் சினிமாவில் நான் சந்தித்ததில்லை.
தினமும், இரவு நேரத்தில் குடித்துவிட்டு என் ரூம் கதவை தட்டுவது என்று இருந்தார்கள். பின், அப்போது ஜென்ரல் மேனேஜராக இருந்த என் கணவரிடம், என் ரூமை மாற்றுமாறும், நான் இருக்கும் ரூம் யாருக்கும் தெரியக்கூடாது என்றும் சொன்னேன். அதன்பின் மாறியதும், என் பழைய ரூமின் கதவை, தட்டிக்கொண்டு இருக்கும் சத்தம் கேட்கும்.
அடுத்த நாள் ஷூட்டிங், கிராமத்தில் நடிக்கும் ஒரு காட்சியில், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் என் உடம்பில் தவறாக தொட்டார்கள். அடுத்த டேக்கிலும் அதேபோல் நடந்தது. மூன்றாவது முறை அவன் கையை பிடித்து வெளியில் இழுத்து சென்றேன். இதுபற்றி ஸ்டெண்ட் மாஸ்டரிடம் கூறியபோது, என் கன்னத்தில் அடித்தார்.
இதுகுறித்து யாரும் சப்போர்ட்-க்கு வரவில்லை. கண்ணீர், கோபத்துடன் உடம்புக்குள்ளே வைத்திருந்தேன். நண்பரிடம் கேட்ட போது இதுபற்றி சங்கத்தில் புகார் கொடுங்கள் என்று கூறினார். யூனியனில் கூறியபோது யாரும் எனக்கு ஆதவராக பேசவில்லை.
சங்கத்தின் செயலாளர் என்னிடம் ‘நீங்கள் ஏன் போலிஸ்-கு செல்லாமல் இங்க வந்தீங்க, சங்கத்துக்கு எல்லாம் வந்திருக்க வேண்டாம்’ என்று கேட்டார்கள் என்று விசித்ரா எமோஷ்னலாக பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Popular Actress and Tamil Biggboss S7 Contestant #Vichitra shares her shocking and personal bitter experience while shooting for her Tamil film years ago!#BiggBossTamil7 #BiggBossTamil #Vichithra #MeToo @Chinmayi pic.twitter.com/1RJimK0sag
— Akshay (@Filmophile_Man) November 21, 2023