உள்ளே போகல குறும்படம் போட்டு காட்டுவ! அனிதாவை மிரட்டிய பிக்பாஸ் குரல்..

biggboss snehan anithasampath biggbossultimate
By Edward Mar 12, 2022 07:20 PM GMT
Report

பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். 41 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு இந்தவாரம் நடிகை ரம்யா பாண்டியன் போட்டியாளராக உள்ளே வந்துள்ளார்.

தற்போது காயின் டாஸ்க் சென்று கொண்டிருக்கும் நிலையில், தவறு செய்த அனிதாவை உள்ளே செல்ல சொல்லியும் அனிதா போகாமல் அடம் பிடித்துள்ளார்.

அதனால் ஒவ்வொரு ஜோடிக்கும் இரு காயின்கள் கொடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் ஆணையிட்டுள்ளார். இதெல்லாம் அநியாயம் என்னால் கொடுக்க முடியாது என்று வாக்குவாதம் செய்துள்ளார் அனிதா. இதனால் கோபமடைந்த பிக்பாஸ், வார இறுதியில் குறும்படம் போட்டு காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

அனிதாவின் இந்த செயலை நெட்டிசன்கள் பார்த்து விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே அனிதா கெட்ட வார்த்தை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து இதுபோல் நடந்து கொள்வது முகம் சுளிக்க வைத்துள்ளது.