பிக்பாஸ் வீட்டைவிட்டு செல்ல இருப்பது இவரா? குஷியில் அசல் கோளாறு!!

Kamal Haasan Bigg Boss Asal Kolaar
By Edward Nov 19, 2022 02:44 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி கமல் ஹாசனால் துவங்கிய பிக்பாஸ் சிசன் 6 நிகழ்ச்சி தற்போது 40நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதுவரையில் ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டவர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரம் 8 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்துள்ளனர். ராஜா ராணி டாஸ்கில் அசீம், ஏடிகே இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆரம்பித்து ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா ரொமான்ஸ் வரை விறுவிறுப்பாக கடந்த வாரம் சென்றது.

இந்நிலையில் இந்தவாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற நேற்றிலிருந்தே நெட்டிசன்கள் யூகித்து வந்த நிலையில் நிவாஷினி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசல் கோளாறு இருக்கும் போது அவருடன் ரோமான்ஸ் செய்வது என்று கேமராவில் ஆக்டிவாக இருந்த நிவாஷினி எதிலும் கலந்து கொண்டு கவனம் செலுத்த தவறியதால் அவரை வெளியேற்ற காரணமாக இருந்துள்ளது.

வெளியில் சென்று அசல் கோளாறுக்கு ஹெல்ப் செய் என்று நெட்டிசன்கள் நிவாஷினியை கலாய்த்தும் வருகிறார்கள்.

GalleryGallery