ஜிபி முத்துவையே கதறவிட்டு அழவைத்த பெண் போட்டியாளர்.. பொங்கி எழும் ஜிபி முத்து ஆர்மிப்படை

Bigg Boss GP Muthu
By Jai Oct 13, 2022 07:07 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 6 சீசன் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிகப்பட்டது. பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதை போல் யூடியூப் பிரபல ஜிபி முத்துவும் சென்றிருக்கிறார்.

பல லட்ச ரசிகர்களை கொண்டுள்ள ஜிபி முத்து ஆரம்ப நாளில் கமல் ஹாசனையே கதறவிட்ட சம்பவம் நடந்தது. இன்று நான்காவது நாளாகியும் ஜிபி முத்துவிற்கென்று தனியாக ஆர்மி ஆரம்பிக்கப்பட்டு ஆதரவை அளித்து வந்தனர்.

வீட்டில் தனலட்சுமி, அவரை பார்த்தாலே காண்டாகுது என்று கூறியும் அவரை வம்புக்கு இழுத்தும் வருகிறார். இந்நிலையில் ஒரு பிரச்சனையில் தனலட்சுமியை வா, போ என்று ஜிபி முத்து கூறியதால் தனலட்சுமி நீங்கள் நடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

நான் நடிக்கிறேனா? என்று சக போட்டியாளர்களிடம் கூறி கதறி அழுதிருக்கிறார் ஜிபி முத்து. இந்த பிரமோ தற்போது வெளியான நிலையில் ஜிபி முத்துவின் ஆர்மிப்படைகள் தனலட்சுமியை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.