கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி கிழிந்து ஒட்டுப்போட்ட பேண்ட்டில் கமல் ஹாசன்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படியா வர்றது..
பிக்பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பான 27 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு வெளியேறியதை தொடர்ந்து இந்தவாரம் யார் வெளியேறுவார் என்று செய்திகள் முனுமுனுத்தப்படி இருக்கிறது.
கடந்தவாரம் அந்த டிவி - இந்த டிவி டாஸ்க்கில் சரியான ஜட்ஜ்மெண்ட் கொடுக்கவில்லை என்று மகேஷ்வரியை சக போட்டியாளர்கள் விமர்சித்து சண்டையிட்டு வந்தனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஹாசன் வரும் நிகழ்ச்சியில் யாரை கிழித்து தொங்கவிடப்போகிறார் என்று நெட்டிசன்கள் எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள்.
#Day27 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/0OmCuF4cBd
— Vijay Television (@vijaytelevision) November 5, 2022
இந்நிலையில் இன்றைய கமல் ஹாசன் ஷோவின் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் கிழுந்த ஆடையை ஒட்டுப்போட்டுள்ளது போல் இருக்கும் பேண்ட்டை அணிந்து வந்திருக்கிறார். கோடிக்கணக்கில் காசு இருந்தும் ஒட்டுப்போட்ட பேண்ட்டா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
