அஜித்குமாருக்கு வயசாகிட்டுச்சு!! பிக்பாஸ் செளந்தர்யாவை வெச்சு செய்யும் AK ரசிகர்கள்..

Ajith Kumar Gossip Today VidaaMuyarchi Bigg Boss Tamil 8 Soundariya Nanjundan
By Edward Jan 11, 2025 02:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8

பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதிக்கட்டத்தை இன்னும் 10 நாட்களில் எட்டவிருக்கும் நிலையில், எவிக்ட்டான போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் விட்டிற்கு வந்து போட்டியாளர்களிடம் பேசி வருகிறார்கள்.

எலிமினேட் ஆன போட்டியாளர்களுக்கும் டாப் 8 போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி வைக்கப்பட்டு வரும் நிலையில் செளந்தர்யாவுக்கு கில்லி படத்தில் திரிஷா ரோலும் சிவகுமாருக்கு மங்காத்தா படத்தில் இருக்கும் அஜித் ரோலும் கொடுக்கப்பட்டுள்ளது.

அஜித்குமாருக்கு வயசாகிட்டுச்சு!! பிக்பாஸ் செளந்தர்யாவை வெச்சு செய்யும் AK ரசிகர்கள்.. | Biggboss8 Soundarya Talks About Ajithkumar Fans

செளந்தர்யா - அஜித்

இப்படியான சூழலில் அஜித்குமார் குறித்து செளந்தர்யா பேசியது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செளந்தர்யா சிவகுமாரிடம், எப்ப சார் நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்போம், உங்களுக்கு வயசாகிட்டே போகுது, ஆனாலும் நடித்துக்கொண்டே இருக்கிறீங்க, உங்களுக்கு வயசே ஆகிடுச்சு ஆனால் நடிச்சிட்டு இருக்கீங்க, பைக் எடுத்துட்டு எங்கயோ போனீங்களே சார், திருப்பியும் வந்துட்டீங்களா சார் என்று அஜித் கதாபாத்தில் இருக்கும் சிவகுமாரை பார்த்து கேட்டுள்ளார்.

இதனை கண்ட அஜித் ரசிகர்கள் செளந்தர்யாவின் அவமரியாதை பேச்சு கடுமையாக கோபத்தை ஏற்படுத்தியதால் ஹேஷ்டேக் கிரேட் செய்து அவரை கண்டபடி திட்டியும் வருகிறார்கள்.