பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேறிய தர்ஷா குப்தா!! 20 நாளுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

Vijay Sethupathi Bigg Boss Dharsha Gupta Bigg Boss Tamil 8
By Edward Oct 26, 2024 01:45 PM GMT
Edward

Edward

in Television
Report

பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் சற்று டல்லடிக்கத்தான் செய்கிறது.

9 ஆண் போட்டியாளர்கள் 9 பெண் போட்டியாளர்கள் என்று 18 பேர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேறிய தர்ஷா குப்தா!! 20 நாளுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? | Biggbosstamil8 Evicted Dharsha Gupta Salary 20 Day

மூன்றாவது வாரம் கடந்துள்ள நிலையில் ரவீந்தர் முதல் வாரத்திலும் அர்னவ் இரண்டாவது வாரத்திலும் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இன்றோரு 20 நாட்களாகியுள்ள நிலையில் இன்று குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ட் செய்யப்பட்டவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தர்ஷா குப்தா எலிமினேட்

இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், தர்ஷா குப்தா, பவித்ரா, அன்சிதா போன்றவர்களின் பெயர் இடம் பெற்ற நிலையில், குறைவான வாக்குக்கள் பெற்ற தர்ஷா குப்தா எலிமினேட்டாகி பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேறிய தர்ஷா குப்தா!! 20 நாளுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? | Biggbosstamil8 Evicted Dharsha Gupta Salary 20 Day

ஒரு மாசத்துக்கு தேவையான ஆடைகளை எடுத்து வந்துள்ளேன் ஒரு மாதமாவது இருப்பேன் என்று தர்ஷா ஒரு போட்டியின் போது கூறியிருந்தார். அதற்கு அந்த ஆசை நிறைவேறாமல் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

இந்நிலையில் தர்ஷா குப்தா 20 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக ஒரு நாள் சம்பளமாக 25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு சுமார் 5 லட்சம் சம்பளமாக வாங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Gallery