இவருக்கிட்ட என்ன இருக்கு கத்துக்க!! வாட்டர்மெலன் திவாகரை வெச்சு செய்த கானா வினோத்..

Gossip Today Bigg boss 9 tamil Watermelon star diwakar Gana Vinoth
By Edward Jan 09, 2026 08:45 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.

அனைவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் நடந்து வரும் நிலையில், 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை கானா வினோத் எடுத்து வெளியேறியிருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினப்பின் வெளியில் சென்று யாருடன் பேசவே கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று போட்டியாளர்கள் கூற வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதற்கு கானா வினோத், எல்லா போட்டியாளர்களிடமும் ஒரு திறமை இருக்கு, அவர்களிடம் இதை கற்றுக்கொள்ள முடியும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றி கூறினார்.

திவாகரை வெச்சு செய்த வினோத்

கடைசியில், திவாகரிடம் நான் என்ன கத்துக்கிறது, நான் வெளியில் பேசுறதுன்னு நீங்களே சொல்லுங்க நான் பேசுறேன். ஏன்னா? ஒருத்தவரை, தனிப்பட்ட விதத்தில் பார்க்கும் போது, உனக்கு என்ன திறமைல இங்க வந்திருக்கன்னு யாரை பார்த்தாவது இங்கே சொல்லமுடியுமா? அப்படி நாம் சொல்றது வாய் வருமா?.

தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஷோவில், சொந்தமா எதுவும் பண்ணதில்லை, ஒன்ன பார்த்து ஒன்ன பண்ணிப்பண்ணி மக்களை ஈர்த்தார், அதனால் அவருடன் தொடர்பு வைக்கமாட்டேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் கானா வினோத்.