பிக்பாஸ் சீசன் 9ல் டபுள் எவிக்ஷன்!! எந்த ரெண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9
விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 68 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டு காரசாரமான வாக்குவாதம் நடந்தது. கடந்த வாரம் பிரஜன் பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு எலிமினேட்டாகி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
டபுள் எவிக்ஷன்
பிக்பாஸ் சீசன் 9ல், 68வது நாள் முடிவில் இன்று சனிக்கிழமை எபிசோட்டின்போது குறைவான வாக்குகள் பெற்று ரம்யா ஜோ தான் எலிமினேட் ஆகினார்.
இதனையடுத்து ஞாயிற்றுகிழமை எபிசோட்டில் மற்றுமொரு போட்டியாளர் எவிக்டாகியிருக்கிறார். சபரி, சாண்ட்ரா, கம்ருதீன், கானா வினோத் போன்றவர்கள் சேவ் ஆகினர்.

நாமினேஷன் லிஸ்ட்டில் மீதம் FJ மற்றும் வியானா இருக்கிறார்கள். அந்தவகையில் குறைவான வாக்குகள் பெற்ற வியானா தான் பிக்பாஸ் எவிக்ட்டாகி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.