ரெட் கார்டில் வெளியேறிய கம்ருதீன் யார பார்த்திருக்காங்க தெரியுமா? ஹாப்பி மூவ்மெண்ட்..
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வரும் ஆரம்பித்து இந்த மாதம் ஜனவரி 18 ஆம் தேதி நிறைவடைந்தது. சீசன் 9ன் டைட்டில் வின்னராக திவ்யா கணேசன் அறிவிக்கப்பட்டு பல லட்சத்தில் பரிசு தொகையை பெற்றார்.

இதனையடுத்து கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில், ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட கம்ருதீன், பார்வதி கலந்து கொண்டனர். ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஆரம்பத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது ரசிகர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
கம்ருதீன்
இந்நிலையில், ரசிகர்கள் மனதில் அதிக கவனத்தை ஈர்த்த 18 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்தையும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை நேரில் சென்று சந்தித்துள்ளார் கம்ருதீன்.
என்னுடைய குடும்பம் என்ற கேப்ஷனுடன் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கம்ருதீன்.