கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் நீக்கம்.. வருத்தத்தில் ரசிகர்கள்
பிரம்மண்ட பொருட்செலவில் உருவாகி வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது வார் 2 திரைப்படம். இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளிவந்ததில் இருந்து, கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் படுவைரலானது.
இந்நிலையில், படம் வெளிவர இன்னும் 3 நாட்கள் இருக்கும் நேரத்தில் படத்திலிருந்து கியாரா அத்வானியின் 9 வினாடிகள் நீச்சல் உடை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக ஆபாசமாக இருப்பதால், நீச்சல் உடை காட்சிகளை நீக்கச்சொல்லி தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளனர். இதன்பின் வார் 2 படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தங்களது வருத்தத்தை தந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.