அஜித்தின் பில்லா படத்தில் ஆட்டம் போட்ட நடிகை யுவராஜ் சிங் மனைவியா? ஷாக்காகும் ரசிகர்கள்..
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007ல் நடிகர் அஜித், நயன் தாரா, நமீதா, பிரபு, ரஹ்மான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது பில்லா. இப்படத்தில் நயன் தாரா மற்றும் நமீதா உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி நடித்திருப்பார்கள். இப்படம் தான் நயன் தாராவுக்கு மிகப்பெரிய இடத்தினை கொடுத்தது என்றே சொல்லலாம்.
அந்தவகையில் இப்படத்தில் ஷாஷா ரோலில் நடித்த நயன் தாராவின் அண்ணன் காதலியாக ஒரு நடிகை நடித்திருப்பார். ரீனா என்ற ரோலில் நடித்திருக்கும் அந்த நடிகை யார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் மிரள வைத்திருக்கிறது.
யுவராஜ் பொண்டாட்டி போட்ட இந்த ஸ்டேப்க்கு ஏகுவாளா இன்னும் ஒரு ஸ்டேப் இல்லை Kollywood ஐட்டம் சாங்ஸ்ல ❤️? pic.twitter.com/0Xj7P8PeSO
— நாகரீக கோமாளி ? (INDIA ka parivar) (@TrashManMe) June 21, 2024
அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் மனைவி தான் அந்த ரோலில் நடித்திருக்கிறாராம். மாடலிங் துறையில் இருந்து படங்களில் நடித்து அறிமுகமாகினார் ஹேசல் கீச். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ஹேசல், ஹாரி பாட்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.
ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாகி, அப்படி விஷ்ணுவர்தன் பில்லா படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ஹேசல் கீச் கடந்த 2016ல் யுவராஜ் சிங்கை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாகினார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
