நடிகை திரிஷாவுடன் நிச்சயம் முடித்தவருடன் டேட்டிங்!! உண்மையை கூறிய பிக்பாஸ் நடிகை

Bindu Madhavi Trisha Gossip Today Actress
By Edward Apr 25, 2024 06:00 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் பல பிரச்சனைகளில் சிக்கி தன் மார்க்கெட்டை இழந்து தற்போது தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸ்-ஐ ஆரம்பித்திருக்கிறார். 96 படம் மிகப்பெரிய வர்வேற்பை கொடுத்ததை அடுத்து, பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவை கதாபாத்திரம் திரிஷாவை மிகப்பெரிய இடத்தினையும் மார்க்கெட்டையும் கொடுத்தது.

நடிகை திரிஷாவுடன் நிச்சயம் முடித்தவருடன் டேட்டிங்!! உண்மையை கூறிய பிக்பாஸ் நடிகை | Bindu Madhavi Affair With Trisha S Boyfriend Varun

அதன்பின் விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்தப்பின், அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஸ்வரம்பரா, கமலின் தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் பல சர்ச்சையான சம்பவங்களை சந்தித்த திரிஷா அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 2015ல் வருண் மணியன் என்பவருடன் நிச்சயத்தார்த்தம் நடைபெற்று பின் திருமணம் நடக்காமல் போனது. சில காரணங்களால் நின்று போன திருமணத்திற்கு பின் உடைந்து போனார் திரிஷா.

நடிகை திரிஷாவுடன் நிச்சயம் முடித்தவருடன் டேட்டிங்!! உண்மையை கூறிய பிக்பாஸ் நடிகை | Bindu Madhavi Affair With Trisha S Boyfriend Varun

இந்நிலையில், வருண் மணியன் மற்றும் பிக்பாஸ் நடிகை பிந்து மாதவி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. பிந்து மாதவி நியூசன்ஸ் என்ற வெப் தொடரில் நடித்து கடந்த 2023 மே மாதம் 12 ஆம் தேதி அன்று ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சந்தித்து இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்த நிலையில் பிந்து மாதவி அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

நடிகை திரிஷாவுடன் நிச்சயம் முடித்தவருடன் டேட்டிங்!! உண்மையை கூறிய பிக்பாஸ் நடிகை | Bindu Madhavi Affair With Trisha S Boyfriend Varun

அது உண்மை தான், இரண்டும் வெவ்வேறு காலத்தில் நடந்ததாகவும் ஒரே சமயத்தில் நடந்தது அல்ல என்று தெரிவித்தார். அதன்பின் திரிஷாவை வருண் பிரிந்தப்பின் தான் டேட்டிங்கில் இருந்தீர்களா? என்ற கேள்விக்கு, ஆமாம் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை பிந்து மாதவி.

Gallery