திரிஷாவின் முன்னாள் காதலருடன் டேட்டிங் செய்தது உண்மை தான்!! மேடையில் ஓப்பன் செய்த பிக்பாஸ் நடிகை
தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக திகழ்ந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. தற்போது 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சில பிரச்சனையால் மார்க்கெட்டை இழந்து தற்போது குந்தவை ரோல் மூலம் மீண்டும் தன் இடத்தை பிடித்தார். இந்நிலையில் நடிகை திரிஷாவுடன் காதலில் இருந்து திருமணம் வரை சென்றவர் தொழிலதிபர் வருண் மணியன்.
சில காரணங்களால் இருவரும் நிச்சயம் செய்து திருமணம் செய்யப்போகும் போது பிரிந்துவிட்டனர். இந்நிலையில் நடிகை திரிஷாவை காதலித்த வருண் மணியன் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான பிந்து மாதவியுடன் டேட்டிங்கில் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
இதுகுறித்து பிந்து மாதவியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். ஆடையின்றி நடிக்க, கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
மேலும் நான் அவருடன் டேட்டிங் சென்றது உண்மை தான் என்றும் திரிஷாவை பிரிந்த பின் தான் அவருடன் டேட்டிங் சென்றீர்களா என்ற கேள்விக்கு ஆமாம் என்று கூறியிருக்கிறார் பிந்து மாதவி.