பிக்பாஸ் வீட்டில் அந்தமாதிரி டார்ச்சர்- கண்டுகொள்ளாத கமல்!! பிரபலம் சொன்ன உண்மை..
பிக்பாஸ் 7 சீசன் பற்றி தான் தற்போது பெரிய பேச்சாக இருக்கிறது. அதற்கு காரணம் ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் தான். எல்லைமீறிய நடந்து கொண்டதாலும் பெண்களுக்கு வீட்டில் அவரால் பாதுகாப்பில்லை என்ற காரணத்தாலும் பலர் புகாரளித்ததன் பெயரில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி யூடியூப் பக்கத்தில் சில விவரங்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பிரதீப்பின் செயல்கள், அப்நார்மல் நபராகவும், வன்முறையாக பேசியும் அதன்பின் மன்னிப்பு கேட்டும் வருகிறார்.
அவர் வீட்டில் இருந்தத தவறு என்று நான் நினைத்தேன், அதேபோல் வீட்டாரும் நினைத்தனர். பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டி வரவேற்ப்பதை வைத்து பிரதீப்பிற்கு நான் தான் டைட்டில் வின்னர் என்ற நம்பிக்கை வந்தது.
இதனால் அவர் மீது மற்ற போட்டியாளர்களிடமும் அச்சம் வந்தது. சுவாரஷ்யம் கிடைப்பதால், ஒரு மனிதன் எவ்வளவு கேடுகெட்டவனாக இருந்தாலும் டிஆர்பிக்காக பிக்பாஸ் குழு கண்டுக்கொள்ளாமலும் முக்கிய இடத்தில் இருக்கும் கமலே இதை கேட்காமல் இருக்கிறார்.
பாலியல் சீண்டலில் ஒவ்வொரு பெண் போட்டியாளர்கலிடம் நடந்து கொண்டிருக்கிறார் என்றும் இதை வெளியில் சொல்ல முடியாமல் பெண் போட்டியாளர்கள் பயந்து போனதாகவும் தெரிவித்திருக்கிறார் பிஸ்மி.
ஜோவிகா நைட் தூங்காமல் உட்கார்ந்து இருப்பதால் எனக்கு தூக்கமே வராமல் இருக்கும் என்றும் ராத்திரியில் ஏதாவது ஒன்று உடைந்தால் பிரதீப் இடத்தை தான் பார்ப்போம் என்று அடுக்கடுக்கான புகாரை அளித்திருக்கிறார். இதேபோல் இதற்கு முன் நடந்த பிக்பாஸ் சீசன்களிலும் இதுபோன்ற நபர்கள் நடந்து கொண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.