19 வயதில் ஓவராக ஆட்டம் போடும் விஜய் சேதுபதி மகன் சூர்யா!! விமர்சித்து பேசிய பிஸ்மி..

Vijay Sethupathi Gossip Today Actors Tamil Actors
By Edward Jun 19, 2024 09:45 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய மகன் சூர்யாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் சூர்யா. சமீபத்தில் பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியது. அந்த டீசர் குறித்தும் விஜய் சேதுபதி மகன் குறித்தும் விமர்சித்து பேசியிருக்கிறார் பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி. சூர்யா விஜய் சேதுபதி என்று கூட தன் பெயரை பயன்படுத்த மட்டேன் என்றும் அப்பா வேற நான் வேற.

19 வயதில் ஓவராக ஆட்டம் போடும் விஜய் சேதுபதி மகன் சூர்யா!! விமர்சித்து பேசிய பிஸ்மி.. | Bismi Roasts Vijay Sethupathis Son Suriya

என் பேரு வெறும் சூர்யா மட்டும் தான் என்றும் சூர்யா மகன் பேசியது சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்பாக ட்ரோல்கள் உருவாகியிருக்கிறது. ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி போன்றவர்கள் நடித்திருப்பதற்கு காரணம் விஜய் சேதுபதி தான். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியானது.

படத்தின் பூஜைக்கே அப்பா விஜய் சேதுபதியை அழைக்காத சூர்யா, டீசர் நிகழ்ச்சிக்கு அழைத்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது. விஜய் சேதுபதியின் மகன் தான் நான் என சூர்யா சொல்ல மறுப்பு தெரிவிப்பது ஏன் என்ற கேள்வியை பிஸ்மி கேட்டுள்ளார். எப்படியாக இருந்தாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புக்கு காரணமே அவர் அப்பா விஜய் சேதுபதி தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.

19 வயதில் ஓவராக ஆட்டம் போடும் விஜய் சேதுபதி மகன் சூர்யா!! விமர்சித்து பேசிய பிஸ்மி.. | Bismi Roasts Vijay Sethupathis Son Suriya

மக்கள் செல்வன் என்று மக்களின் அன்பால் இந்த அளவிற்கு உயர்ந்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தொடர்ந்து தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால் தான் ஹீரோவாக தொடர முடியும். பீனிக்ஸ் படத்தின் டீசர் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று பிஸ்மி ஓப்பனாக கூறியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் மேனரிசம் எதுவுமே அந்த டீசரில் புதிதாக தெரியவில்லை என்றும் டீசர் ரசிகர்களையும் பெரியளவில் கவரவில்லை என்றும், படம் வரட்டும் எப்படி இருக்கிறது பார்ப்போம் என்று பிஸ்மி விமர்சித்து பேசியிருக்கிறார்.