ஜிவி பிரகாஷின் ப்ளாக்மெயில் படம்!! எப்படி இருக்கு தெரியுமா?
ப்ளாக்மெயில்
இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்னை நம்பாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய மு மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளாக்மெயில். இப்படம் இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
கதைக்களம்
படத்தின் தொடக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் பிந்து மாதவி தம்பதியின் குழந்தை காணாமல் போகிறது. அதேசமயத்தில் நாயகன் ஜிவி பிரகாஷ், ஒரு பார்சலை கொடுக்கச்சென்று தன் வாகத்தை தொலைத்துவிடுகிறார். அந்த வண்டியில் விலையுயர்ந்த போதைப்பொருள் இருந்ததால் ஜிவி பிரகாஷ் மீது திருட்டு பழி சுமத்தப்படுகிறது. காணாமல் போன குழந்தைக்கும் - ஜிவி பிரகாஷுக்கும் என்ன தொடர்பு என்பது தான் மற்ற கதை. இயக்குநர் மு மாறன் வழக்கமான சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் இப்படத்தை எடுத்துள்ளார்.
முதல் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் தொற்றினாலும், கதாபாத்திர வடிவமைப்பிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் படத்திற்கான பின்னடைவாக இருக்கிறது. கர்ப்பிணி காதலியை காப்பாற்ற போராடும் ஜிவி பிரகாஷ், குழந்தை வரம் வேண்டி தவிக்கும் ரமேஷ் தொலை, குழந்தையை தொலைத்த ஸ்ரீகாந்த் என ஆண் கதாபாத்திரங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான பிணைப்புகள் ஸ்ட்ராங்காக மாறி பிளாக்மெயில் படம் பிளாக்பஸ்டர் படமாக மாறியிருக்கும்.
ஜிவி பிரகாஷ்
கடத்தத் துடிக்கும் லிங்கா, காதலியைக் காப்பாற்றப் போராடும் ஜி.வி. பிரகாஷ், முதலாளியைப் பழிவாங்க நினைக்கும் தொழிலாளி என்று இருந்தாலும் திரைக்கதையாக மாற்றும் போது கதை பல இடங்களில் தடுமாறுகிறது சில காமெடி காட்சிகள் ஆங்காங்கே ரசிகர்கள் கிச்சுகிச்சு மூட்டசெய்தது.
இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்க, ஜிவி பிரகாஷ் குமாரின் நடிப்பு படத்தை தாங்கி பிடித்துள்ளது. ஜிவி பிரகாஷின் காதலி தேஜு அஸ்வினி நல்ல தேர்வாகவும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். திரில் படமாக இருக்கும் ப்ளாக்மெயில் படம் கடைசிவரை ஏகப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் இடம்பெற்றாலும் சுவாரஸ்ய குறைபாடு பெரிதாக படத்தை ரசிக்கமுடியாமல் போயுள்ளது. ப்ளாக்மெயில் நல்ல திரை அனுபவத்தை கொடுக்கும்.