கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்!! சூர்யாவை யாராச்சும் பாத்தீங்களா? கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..
தமிழ் சினிமா வட்டாரத்தில் சினிமா சம்பந்தமான விஷயங்களை விமர்சிப்பவர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ப்ளூ சட்டை மாறன். ஒரு படத்தினையோ ஒரு விஷயத்தையோ விமர்சித்தால் அவரின் விமர்சனத்தை பார்க்கவே பலர் காத்திருப்பார்கள். அப்படி டாப் நடிகர்களாக இருந்தாலும் சரி வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தாலும் சரி விடவே மாட்டார்.
சமீபகாலமாக ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்றவர்களின் நடவடிக்கைகளை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வரும் ப்ளூ சட்டை மாறன், தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரமாக சில பதிவுகளை பகிர்ந்திருக்கிறார்.
பல அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்தது ஆறுதல் கூறி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் விஜய் கூட கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்றி ஆறுதல் கூறியிருந்தார்.
ஆனால் இதுபற்றி நடிகர் சூர்யா எந்த கருத்தும் போடவில்லை என்ற கருத்தினை முன் வைத்து அவரை கலாய்க்கும் வண்ணம் மீம்ஸ் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். எப்போதும் சூர்யா சமூக கருத்துக்களுக்காக சில பதிவுகளை பகிர்வது வழக்கம். ஆனால் இதுபற்றி சூர்யா எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பதை கலாய்த்து புகைப்படத்தோடு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.



