நடிகையை அந்தமாதிரி வர்ணித்த அஜித்! கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்..

ajith youtuber maaran red movie bluesattaimaaran valimaireview
By Edward Mar 02, 2022 09:25 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் வலிமை. இப்படம் குறித்து பல நேர் எதிர்மறை விமர்சனங்களை யூடியூப்பில் கூறி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் வீடியோவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.

அப்படி அவர் படத்தினை விமர்சித்ததை விட அஜித்தின் உடல் குறித்து கேலி செய்துதான் அதிகமாக பேசியிருந்தார். இதற்கு பிரபலங்களும் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து அவரை பற்றி கண்டபடி திட்டி வந்தனர்.

அதற்கு பதில் கொடுத்து ப்ளூ சட்டை மாறன் பல கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் அஜித் நடித்த ரெட் படத்தினை மேற்கோல் காட்டி ஒரு அறிக்கை பதிவினை போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அதில் நடிகையை இப்படியொரு வரிகளில் வர்ணித்து பாடல் அமைந்துள்ளதை திராணி இருந்தால் அவர்களை கண்டியுங்கள் இல்லாவிட்டால் மூடிக்கொண்டு இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் கண்டபடி திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.