மகனுடன் கிரிக்கெட் விளையாடிய அஜித்!! பங்கமாக கலாய்த்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..

Ajith Kumar Gossip Today Blue Sattai Maran
By Edward Jun 19, 2024 06:00 PM GMT
Report

தமிழ் சினிமா வட்டாரத்தில் சினிமா சம்பந்தமான விஷயங்களை விமர்சிப்பவர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ப்ளூ சட்டை மாறன். ஒரு படத்தினையோ ஒரு விஷயத்தையோ விமர்சித்தால் அவரின் விமர்சனத்தை பார்க்கவே பலர் காத்திருப்பார்கள். அப்படி டாப் நடிகர்களாக இருந்தாலும் சரி வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தாலும் சரி விடவே மாட்டார்.

மகனுடன் கிரிக்கெட் விளையாடிய அஜித்!! பங்கமாக கலாய்த்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maaran Slams Ajithkumar Photos

அந்தவகையில் நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தன் மகன் ஆத்விக் உடன் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அவர் மகனுடன் கிரிக்கெட் விளையாடி புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது. இதனை வைத்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் வழக்கம் போல் கலாய்த்தபடி கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் ”இதை வழக்கம்போல ஃபோட்டோ எடுத்து பப்ளிசிட்டி செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டார். அவர்களும் வழக்கம்போல பப்ளிசிட்டி செய்து விட்டார்கள். இதுதான் தலயின் எளிமை.” என்று கூறியிருக்கிறார்.

மகனுடன் கிரிக்கெட் விளையாடிய அஜித்!! பங்கமாக கலாய்த்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maaran Slams Ajithkumar Photos

இதற்கு நெட்டிசன்களும் அஜித் ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனை கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.