விஜய்யை தாக்கி பேசும் ப்ளூ சட்டை.. அதுக்குன்னு இப்படியெல்லாம் பேசலாமா?

Vijay Actors Blue Sattai Maran Tamil Actors
By Dhiviyarajan Jun 18, 2023 09:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் விஜய் நேற்று 10 மற்றும் 12 வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை கொடுத்தார்.

மேடையில் பேசிய விஜய் அரசியல் குறித்து பல விமர்சனங்கள் முன்வைத்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் விஜய் அரசியலில் விரைவில் வரப்போகிறார் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்யை தாக்கி பேசும் ப்ளூ சட்டை.. அதுக்குன்னு இப்படியெல்லாம் பேசலாமா? | Blue Sattai Maran About Vijay Political Entry

இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், " சூப்பு ஸ்டாரை மீம்ஸ் போட்டே அரசியலுக்கு வராம காலி பண்ணியாச்சி. அதனால கமாண்டர் சுறாவை வச்சி ஆட்சியை புடிக்க தாமரை ஆர்மி திட்டம் போடுது.

நம்மாளு ரெய்டுல சிக்குனதால வேற வழி இல்லாம அரசியலுக்கு வந்தாக வேண்டி கட்டாயப்படுத்தி இருக்காங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்களே... நெசந்தானா? என்று பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு.