ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..அடுத்த சாரி எப்போன்னு கேட்டு கலாக்கும் ப்ளூ சட்டை மாறன்..

M K Stalin Gossip Today Blue Sattai Maran C Joseph Vijay
By Jai Sep 10, 2026 08:30 AM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரையில் சில நாட்களுக்கு முன் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது, திமுகவை அட்டாக் செய்ய சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எல்லாம் வாசித்து காண்பித்தார்.

அதுமட்டுமின்றி மிசாவில் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் கதாகி, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் உடைந்த தாடையை கிண்டல் செய்யும் விதமாக உடல்மொழியையும் வெளிப்படுத்தி இருந்தார். அவரது அந்த செய்கை பலரையும் அதிருப்தியை ஏற்படுத்தி கண்டனத்திற்குள்ளானது.

விஜய் விளக்கம்

இதுகுறித்து விஜய் விளக்கத்தில், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கொரிக்கையில், என் பதிலுரையின் இடையே என்னுடைய உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நீண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தம்பி விஜய்

அதில், தம்பி விஜய், நீங்கள் முதலமைச்சரானப்பின் என் வீட்டு வந்தீர்கள், நான் உங்கள் கரம் பற்றி அழித்துச்சென்றேன். அப்போது என்னிடம், தேர்தல் பரப்புரையில் உங்களை அளவுக்கதிமாக விமர்சித்துவிட்டேன், ஐ அம் சாரி சாரி என்று சொன்னீர்கள்.

உடனே நான், அதெல்லாம் நான் மனதில் வைத்து கொள்ளவில்லை பிரதர், இப்போது நீங்கள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், யாரைப்பற்றி பேசும்போதும் அந்த கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல, சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அதை மனதில் வைத்துக்கொண்டு பேசுங்கள். முதலமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும் என்று கூறி, தற்போதைய ஆட்சி ரீல்ஸ் ஆட்சி என்றும் விமர்சித்துள்ளார்.

இதனை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், விஜய் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவை பகிர்ந்து, சாரி மட்டும் சொன்னா போதுமா சார்? என ஸ்டாலினை கேட்ட விஜய், இதுவரை இரண்டு முறை ஸ்டாலினியிடம் சாரி கேட்டுள்ளார். அடுத்த சாரி எப்போது வரும் ப்ரோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.