சிம்புவை வெச்சி செய்யும் ப்ளூ சட்டை மாறன்! அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் Mr. STR?

Silambarasan Blue Sattai Maran
By Parthiban.A Sep 19, 2022 11:37 AM GMT
Parthiban.A

Parthiban.A

Report

சிம்பு

 நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. படம் மூன்றே நாட்களில் 50 கோடி வசூலை கடந்து பெரிய அளவு லாபத்தையும் ஈட்டி இருக்கிறது. நேற்று அந்த படத்தின் வெற்றி விழாநடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.

மேலும் சிம்பு பேசும்போது சில விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். ப்ளூ சட்டை மாறன் நடிகர்கள் உடலை பற்றி விமர்சிப்பது பற்றி குறிப்பிட்ட அவர் 'யாரையும் அப்படி விமர்சிக்காதீங்க, நான் தாங்கிக்கொள்வேன், எல்லோராலும் முடியாது' என கூறி இருக்கிறார்.

சிம்புவை வெச்சி செய்யும் ப்ளூ சட்டை மாறன்! அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் Mr. STR? | Blue Sattai Maran Reply To Simbu

ப்ளூ சட்டை கேள்வி?

அதற்கு பதிலடி கொடுத்து இருக்கும் ப்ளூ சட்டை மாறன், சிம்பு அவரது படங்களில் வரும் பாடல்களில் பெண்களின் உடலை பற்றி மிக மோசமான வார்த்தைகளில் குறிப்பிட்டு இருக்கிறார். அதை பதிவிட்டு சிம்புவிடம் கேள்வி கேட்டிருக்கிறார் ப்ளூ சட்டை.

இத்தனை நாள் நடிகர் பார்த்திபனிடம் வம்புக்கு சென்றப்ளூ சட்டை தற்போது அப்படியே வண்டியை சிம்பு பக்கம் திருப்பி இருக்கிறார்.