இரவின் நிழல் முதல் சிங்கிள் ஷாட் படம்-ன்னு பார்த்திபன் ஏமாத்துராரு? சர்சசையை கிளப்பிய இயக்குனர் மாறன்..
உலகளவில் ஒரே ஷாட்டில் ஒரு முழு படத்தினை இயக்குவது என்பது சாதாராண விசயம் கிடையாது. அப்படி Non Linear முறையில் ஒரே சிங்கிள் ஷாட்டில் திரைப்படமாக எடுத்து உலகளவில் சாதனை படைத்து இரவின் நிழல் என்ற படத்தினை இயக்கி வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் ஆர் பார்த்திபன் அவர்கள்.
புதுப்புது முயற்சிகளை கொண்டு படங்களை இயக்குவதில் முதன்மையாக திகழ்ந்து வருகிறார் பார்த்திபன். அப்படி பல கஷ்டங்களை தாண்டி இரவின் நிழல் படத்தினை எடுத்திருக்கிறார். திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்து வரும் இப்படம் மிகப்பெரியளவில் நல்ல கருத்துக்களோடு விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் யூடியூப் விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் அவரது டிவிட்டர் பக்கத்தில் இரவின் நிழல் படம் முதலாவது சிங்கிள் ஷாட் படம் என்று கூறுவது பொய் என்று கூறியுள்ளார். ஏற்கனவே Fish & Cat என்கிற ஈரானிய படம் Non Linear படமாக வெளியாகியிருக்கிறது.
உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் என்று பார்த்திபன் கூறுவது பொய் என்று விமர்சித்துள்ளார். ஆனால் உண்மையில் Fish & Cat என்கிற ஈரானிய படம், 3 நாட்கள் எடுக்கப்பட்டு ஹிட்டன் கட் செய்து வெளியிடப்பட்டுள்ளது என்று சமுகவலைத்தளத்தில் சிலர் கூறியும் கண்டபடி எதையும் பேசாதீர்கள் என்று ப்ளூ சட்டை மாறனை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
@rparthiepan @iravin_nizhal #IravinNizhal the movie mahi and gorbe is not a non linear movie and also it's not a single shot movie it has been shot on three days and edited it's a three shot movie @tamiltakies before twitting kindly investigate on the movie
— BADRI NARAYANAN (@BADRIN82) July 16, 2022