ஒரே புகைப்படம் ஒட்டுமொத்த படமே காலி! டான் படத்தை கலாய்த்த இயக்குனர்..

Sivakarthikeyan Don
By Edward May 13, 2022 08:45 AM GMT
Report

குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மனதை தன் நடிப்பால் ஈர்த்து முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடித்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி முதல் படமாக இயக்கும் டான் படத்தில் நடித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், சூரி, பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இப்படம் இன்று 13 ஆன் தேதி பல திரையரங்கிகளில் 4 மணிமுதலே வெளியாகியுள்ளது.

அதிகாலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் ஆரம்பித்த இப்படம் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் எப்போது படங்களை விமர்சித்து வீடியோவையும், சமுகவலைத்தளத்தில் எதார்த்தமான கருத்துக்களையும் பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் ஒரே ஒரு புகைப்படத்தை பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

ஒரு சிலரோ அவரின் விமர்சனத்தை பார்த்தபின் தான் படத்திற்கே செல்வதுண்டு. இதனால் படத்தின் வசூலும் எதிர்ப்பார்ப்பும் குறைந்துவிடுகிறது என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.

அப்படியிருக்கையில் டான் படத்தை பார்க்கும் ரசிகர்கள் தியேட்டரில் தூங்குவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு கலாய்த்துள்ளார்.

இதனை வைத்து அவரை ரசிகர்கள் பழசு எது புதுசு எதுன்னு பார்க்காம எதாவது புகைப்படத்தை போடுவது என்று பதிலடி கொடுத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.